PREV NEXT
(Thirukkural in Tamil – அதிகாரங்கள்)
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
-
- அறத்துப்பால்
- பொருட்பால்
- காமத்துப்பால்
- அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.
- பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.
- இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் திருக்குறளில் உள்ளன.
திருக்குறள் இயல்கள்:
| இயல் | |
|---|---|
| 1 | பாயிரவியல் |
| 2 | இல்லறவியல் |
| 3 | துறவறவியல் |
| 4 | ஊழியல் |
| 5 | அரசியல் |
| 6 | அமைச்சியல் |
| 7 | அரணியல் |
| 8 | கூழியல் |
| 9 | படையில் |
| 10 | நட்பியல் |
| 11 | குடியியல் |
| 12 | களவியல் |
| 13 | கற்பியல் |
